Sunday, 23 March 2014

எனதருமை மகனுக்கு உன் தந்தை எழுதிய சிறுகாவியம்




கவி பிரியன்
@
சகாதேவ்

எங்கள் கவிதைப் புணர்ச்சியில்
கருத் தரித்த
கவிக்குஞ்சு அவன்… 

இப்புவியின்
வசந்தம் எழுதப்
புறப்படுப் போகும்
கவி தாசன்… 

அன்பின்
செழுமை தாங்கி 
அர்த்தமுள்ள மனிதர்களைப்
பிரசவிக்கும்
அட்சயப் பாத்திரம்
அவன்

வைகறையின்
புதுக் கதிர்.....

வசந்தத்தின்
வரவு...

ஆம்!
அவனே
எங்கள் அன்பு
மகன்....



No comments:

Post a Comment